Sunday, November 27, 2011

அட கடவுளே!!!


இன்று முடிஞ்சவரை தமிழ்ல எழுத முயற்சி பண்றேன்.. எதாவது தப்பு இருந்த மன்னிச்சிருங்க!!! (school timeல தமிழ் எழுதியது, அதோட இப்பத்தான் எழுதுறேன்.. so கண்டிப்பா spelling mistakes நிறைய இருக்கும்!!!)


காலைல கஷ்டப்பட்டு முழிச்சி, குளிச்சி, பஸ்ச புடிக்கறது பரிட்சைல பாஸ் ஆகுற மாதிரி. உட்கார இடம் கிடைச்சா  school 1st  வந்த மாதிரி...

அதுலையும் ஸ்கூல் பசங்க bag , வேளைக்கு போறவங்களோட handbag இல்லை lunch bag நம்ப தலைல கட்டாம...  வயசானவங்க யாரும் நம்பகிட்ட இடம் கேட்காம... Ticket Pass பண்ற வேலை இல்லாம... போய் சேருறது state 1st வாங்கின மாதிரி...

இப்படி கஷ்டப்பட்டு போன்ன வாரம் ஒரு நாளு பஸ்ல இடம் கிடைச்சு சந்தோசமா பாட்டு கேட்டு உட்கார்திருந்தேன். 

என் பக்கதுல ஒரு பொண்ணு வந்து உட்கார்ததளிருந்து ரொம்ப seriousஆ  போன்ல பேசிட்டு இருந்தா... அப்படி எனத்தான் பேசுறன்னு பாட்ட pauseல போட்டு (ஒட்டு)கேட்டேன்.. (ஹி ஹி ஹி)...

"இந்த வாரம் கண்டிப்பா அம்மாவை பாக்க நீ வர..." (எதோ குடும்ப பிரச்னை போல்ல)
"அம்மாவை பாத்த உன் கஷ்டமெல்லாம் போய்விடும் ...."  (எந்த அம்மா???)
"இல்ல பேசலாம் முடியாது... 6500 ரூபாய் கட்டின அவங்களா கிட்ட பாக்கலாம்... " (ஆஹா இது தான் matterஆ)
"அம்மாவை பார்வதியா அலங்காரம் பண்ணி அவங்களுக்கு அபிசேகம் நடக்கும்... அத பாத்தாலே போதும் உனக்கு எந்த கஷ்டமும் இனி வராது.." (அட கடவுளே!!! )

இந்த காலத்திலும் இந்த மாதிரி விஷயங்கள எப்படிதான் ஜனங்க நம்புராகளோ!!!

முக்கியமா இதுல போய் சேருரவங்க படிச்சவங்களும், high-class peoples தான்...

என்னை பொறுத்த வரை மனுஷன் தான் கடவுள்  கிட்ட எதையாவது எதிர்பார்ப்பான். கடவுளுக்கும் மனுஷனுக்கும் உள்ள உறவு அம்மா-குழந்தைக்கும் உள்ள உறவு போல. அவளோட குழத்தை கேட்டதையெல்லாம் கொடுப்பா ஆனா அவ திருப்பி எதிர்பகுறது அன்பு மட்டும் தான். 6500 ரூபாய் குடுத்தா தான் அவங்களா பாக்கமுடுயும்நா அவங்க சாமி இல்லை ஆசாமி...

சரி நான் போய் என் வேலைய பாக்குறேன்... என்ன வேலையா ?? தூங்கறது தான்....atleast நாளைகாவது சீக்கரம் எழுந்து பஸ்ல seat புடிக்கலாம்னு பாக்குறேன்!!!

சொல்ல மறந்துட்டேன் Latest trendஆ அம்மாவை நம்ப மக்கள் design designஆ திட்டினதுல போன வாரம் பஸ்ல நல்ல time pass ஆச்சு... ஹி ஹி ஹி!!!!

No comments: