Thursday, September 30, 2010

நேற்று போல் இன்று இல்லை

முன்பு ...

வாக்கியமாக கூட எடுத்துகொள்ள முடியாத
ஒன்றை "கவிதை" என்று உன்னிடம்
காண்பித்தேன்...
அருமை என்றாய்...
இன்னமும் எழுத பழகினால் பெரிய கவினர்
ஆகிவிடுவாய் என்றாய்...

குழந்தையின் கிறுக்களை விட மோசமான
ஒன்றை "ஓவியம்" என்று உன்னிடம்
காண்பித்தேன்...
அருமை என்றாய்...
இன்னமும் வரைய பழகினால் பெரிய
 ஓவியர் ஆகிவிடுவாய் என்றாய்...


சுடுநீர் கூட போடதெரியாத நான்,
சமையல் செய்தேன்...
சோதனையாக என் செல்லபிரானிக்கு சிறிது வைத்தேன்...
முகர்ந்துவிட்டு சென்றது..
அனால் முழுவதையும் நீ உண்டாய்..
அருமை என்று சொன்னாய்...
இன்னமும் சமைக்க பழகினால் நளன் ஆகிவிடுவாய் என்றாய்...


இன்று....
பழக பழக ஆனைத்தும் வந்தது...
அனால் பழகிய நீ மட்டும் இல்லை...

1 comment:

Saravanan said...

Good one...
Realy liked the satire at the last two lines...Keep going