Showing posts with label Friends. Show all posts
Showing posts with label Friends. Show all posts

Wednesday, October 07, 2009

உயிரில் பூத்த தோழமை!!!....

ஒரு காத்திருப்பின்
இடைவேளையில்
நட்பில் கரைந்த
ஞாபகங்கள்!!
தனக்கு வேண்டியதை
`தா`என்று கேட்கவும்
கேட்காமலே
எடுத்துக் கொள்ளவுமான
உரிமைப் பத்திரம்!
மௌனத்தின் பாஷை
இத்தனை
தெளிவாய் இருக்குமா
உயிரில் கேட்கிறதே!!
ஒவியம் வரைகையில்
தூரிகையின்
பெருமூச்சு
புரியும் நிதானம்
புலன்களில்…
வண்ணங்களை
வாரியிறைத்து
எனக்கு மட்டுமாய்
இயற்கை
சந்தோஷிக்கிறது!
ஒரு சந்தோஷத்தின்
வேதனையை
ஒரு வேதனையின்
சந்தோஷத்தை
இதயம் உணர்கிறது!
தாய்மடி மேல்
தலை வைத்தழும்
சுதந்திரம் போல்…
உள்ளார்ந்த தோழமையில்
உயிர் சிலிர்க்கிறது!
உன்னை நானும்….
என்னை நீயுமாய்
பகிரும் பொழுதுகளில்
பசியில்லை…..
தாகமில்லை……
மனவெளியில்
மகிழ்ச்சி
ஆயிரம் மழைத் துளிகளாய்
வர்ஷிகின்றது!!!
காதலின் சுகம்
போலவே
நட்பின் இதமும்
ஒரு புதிராய்
அதிரும் மனதின்
தலை தடவுகிறது!!!
ஒரு
நட்பின் புன்னகைக்கு
உதடுகள்
தேவையில்லை
இதயம் போதுமே!!!

Monday, September 28, 2009

நட்பு

நட்பில் கவலைக்கு இடமில்லை

சோற்றுக்கு வழி இல்லாத போதும்
சுருட்டுக்கு மட்டும் பஞ்சமில்லை

வகுப்பு ஏட்டில் பெயர் இருக்கிறது, ஆள் யார்?
அது வாத்தியருக்கு விளங்கவில்லை

ஆறு மாதம் முக்கி முக்கி படிக்க வேண்டியதை
ஒரே இரவில் எப்படி படித்தோமோ தெரியவில்லை

ஒரே வண்டியில் நான்கு பேர் சென்று
சறுக்கி விழுந்த போது வலி தெரியவில்லை

எதையும் நண்பணிடத்தில் மறைத்ததில்லை
சுற்றுச் சூழலை நினைத்ததில்லை

பல மொழிகள் பேசும் மாணவர்கள் இருந்தாலும்
நட்புக்கு மட்டும் மொழி இருந்ததில்லை

வகுப்பை தவிர கல்லூரியின் மற்ற இடங்களில்
நாம் கால் வைக்காத இடமில்லை

வந்த முதல் நாளில், தெரிந்தவர் தவிர
வேறொருவருடன் பேசி நினைவில்லை

ஒரே வாரத்தில் மாமன் மச்சான் உறவு
எங்கிருந்து வந்ததோ தெரியவில்லை

விடுமுறை விட்டாலும், வீடு திரும்பவில்லை
நட்புக்கு மட்டும் என்றும் விடுமுறையில்லை

இப்படியெல்லாம் பழகிய நமக்கு இன்று
யார் யார் எங்கிருக்கிறோம் என்பதே தெரியவில்லை

Never mind what others do, do better than yourself.
Beat your own records every day and aim for a better tomorrow
Success will chase you.